Skip to main content

சிறந்த தமிழ் படமாக 'கடைசி விவசாயி' - விவசாயி நல்லாண்டிக்கு தேசிய விருது

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

nn

 

2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய  தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த குறும்பட பிரிவில்  'ஏக்  தா கவுன்' என்ற குறும்படத்திற்காக பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வயலின் இசை மேதை டி.என்.கிருஷ்ணன் பற்றிய ஆவணப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த இந்தி படமாக 'சர்தார் உத்தம்'. சிறந்த மலையாள திரைப்படமாக 'ஹோம்', சிறந்த குஜராத்தி திரைப்படமாக  லாஸ் பிலிம் சோ', சிறந்த கன்னட திரைப்படமாக '777 சார்லி, சிறந்த தெலுங்கு திரைப்படமாக 'உப்பண்ணா', சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக 'ஆர்.ஆர்.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக விஷ்ணு மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாதவனின் 'ராக்கெட்ரி சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்