Published on 13/11/2018 | Edited on 13/11/2018

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் போராட்டம் நடத்தினார். தருமபுரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி இருவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.