Skip to main content

கல்லூரி மாணவர்களிடையே தகராறு; தாக்குதலில் ஈடுபட்ட வெளி கும்பல்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

nagapattinam government college commerce student incident    

 

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்துக் கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் படிக்காத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த டவுசர், லுங்கி அணிந்து கொண்டு வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர். ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் கல்லூரி மாணவர்களை தாக்கத் தொடங்கினர்.

 

மாணவர்களுக்கு இடையே கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்சனையை கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளியில் இருந்து வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்