Skip to main content

குழந்தையை கொன்ற தாய்; அலறல் சத்தத்தால் காப்பாற்றப்பட்ட இரு உயிர்!

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Mother who incident her child in Chennai

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் - திவ்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  இந்த நிலையில் ராம்குமாருக்கும் திவ்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக திவ்யா கணவர் ராம்குமாரை பிரிந்து கீழ்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  மன உளைச்சலில் இருந்த திவ்யா, வாழ்கையை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதனால், கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தனியாக குழந்தைகளுடன் இருந்த திவ்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து 1 வயது ஆண் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றுள்ளார். பின்னர் மற்றொரு மகனான 4 வயது மகனின் கழுத்தையும் அறுத்துவிட்டு தனது கருத்தை அறுத்துக்கொண்டு திவ்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் 4 வயதுக் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே 4 வயது மகனுக்கும், திவ்யாவிற்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திவ்யா உடல்நல தேறினார். அதனைத் தொடர்ந்து திவ்யாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்