Skip to main content

போராடினால்தான் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் தூண்டப்படுகிறார்கள்... -ஆர்.பி. உதயக்குமார்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
rb udhayakumar

 

சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்,


முதல்வர் எதிர்கட்சிகள் உள்ளிட்ட யாரும் கோரிக்கை வைக்கும் முன்னரே 4 இலட்சமாக இருந்த நிவாரண தொகையை 10 இலட்சமாக அறிவித்தார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில்  எதையுமே விசாரிக்காமல் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இந்தமாதிரியான நேரங்களில் இது தேவை இல்லாதது. அங்கு களத்தில் உழைப்பவர்களும் மனிதர்கள்தான். சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால்தான் நிவாரணம் கிடைக்கும் என மக்களை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது.  இன்னும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் செய்யவேண்டி இருக்கிறது. எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்