Skip to main content

“சுங்கக் கட்டணம்... இது பகல் கொள்ளை...” - கவன ஈர்ப்பு செய்த எம்.எல்.ஏவுக்கு பதில் தந்த அமைச்சர்

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Minister E V Velu spoke about toll price

 

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் எனத் தெரிகிறது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. 

 

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. வேல்முருகன், சுங்கக் கட்டணம் உயர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் அவர், சுங்கக் கட்டணம் உயர்வு பகல் கொள்ளையாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், 30 முதல் 40% வரை சுங்கக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

 

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது. பராமரிப்பு பணிகளுக்கு கூட 40% குறைவாகத்தான் வசூல் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் சுங்கக் கட்டணத்தை நிறுத்த கோரிக்கை வைத்து வருகிறேன். 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்