Skip to main content

எம்.ஜி.ஆர். சிலையை திறந்தால் அமைச்சர் பதவிக்கு வேட்டு;எதற்கு நூற்றாண்டுவிழா : அமைச்சர் காமராஜை வறுத்தெடுக்கும் அதிமுகவினர்...

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி நடந்து முடிந்துள்ளது. அதே நேரத்தில் "எம்ஜிஆர் சிலையை சிறை வைத்துவிட்டு அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டுவதா," என்கிற வாசகத்தோடு மன்னார்குடியில் அதிமுகவினர் வைத்த விளம்பர பதாகையினால்  தொண்டர்கள் மத்தியில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

 

Century Festival

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் காமராஜ் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களிடையே பணம் வசூலிக்கப்பட்டு ரூ 11 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர் உருவ வெண்கல சிலையை உருவாக்கினர். அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலை அனுமதி மற்றும், இடம் பிரச்சனையினால் திறக்கப்படாமலேயே இருந்தது.  திருவாரூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திறக்கப்படும் என அதிமுகவினர் எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அப்போதும் திறக்கவில்லை பிறகு டி.டி.வி. தினகரன் நலத்திட்டம்கள் வழங்கும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் காமராஜை சாம்பார் வாலி தூக்கியவர்  என கடுமையா தாக்கிப் பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும்  விதமாக துணை முதல்வர் பண்ணீர் செல்வத்தை அழைத்து வந்து 20 கோடிக்கு மேல் செலவு செய்து தினகரனை திட்டி பழியைத் தீர்த்துக் கொண்டார். அப்போது பன்னீர்செல்வத்தை வைத்து திறப்பார் என ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர் அதுவும் பொய்யாகி போனது.

 

Century Festival

 

இந்த நிலையில் எம்.ஜி. ஆர்  சிலை திறப்பு குறித்து அதிமுகவினர் அமைச்சர் காமராஜிடம் பல முறைதொிவித்தும் சிலை திறக்கப்படவில்லை. அதற்கான முயற்சியும் எடுத்தப்பாடில்லை.

 

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்பட்டு இறுதியாக சென்னையில் பிரம்மாண்டமாக நிறைவு விழா நடைபெற்றது. அந்த விழாாவிலாவது கான்பரன்ஸ் மூலம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது அதுவும் பொய்த்துவிட்டது. இதனையடுத்து மன்னை அதிமுகவினர் ஆத்திரமடைந்து எம்ஜிஆர் சிலையை சிறைவைத்துவிட்டு எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவா என கேள்வி எழுப்பி மன்னார்குடியில் விளம்பர பாதகை வைத்துள்ளனர்.

 

இந்த விளம்பர பாதகை வைக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் ஆதரவாளர்கள் கூறுகையில், " எம்ஜிஆர் சிலை திறக்க வேண்டும் என அமைச்சர் காமரராஜிடம் பல முறை கேட்ட போதும் வழக்கு உள்ளது என சப்பை காரணம் கூறி சிலை திறக்காமல் நிராகரித்து வருகிறார். அவர் கூறுவது போன்று எந்த வழக்கும் இல்லை. அந்த சிலை திறந்தால் அமைச்சரின் பதவி பறிபோய் விடும் என அவருக்கு நெருக்கமான  ஜோசியர் கூறியாதால் அமைச்சர்  எம்.ஜி. ஆர்.சிலையை திறக்க தயங்குகிறார். என்கிற உண்மையை கூறினர்.

 

ஒராண்டாக தமிழகம் முழுவதும் பொதுமக்களின் வரிபணத்தில் எம்.ஜி.ஆர் விழா என்கிற பெயரில் கூத்தடித்துள்ளனர் அதிமுகவினர். ஏதோ தொலைந்து போகட்டும் ஆனால் யாருக்கு விழா நடத்துகிறார்களோ அவரின் சிலையை திறந்தால் பதவி போய்விடும் என புறக்கணித்துவிட்டு எதற்கு போலியாக விழா எடுக்கனும், என வேதனைப்படுகிறார்கள் மன்னார்குடி பொது மக்கள்.

சார்ந்த செய்திகள்