Skip to main content

தொடர் மழையால் மெரினா கடற்கரையில் நீர் சூழ்ந்துள்ளது... (படங்கள்)

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில், அதிகாலை 05.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது. 

 

தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில், சென்னையிலும் பலத்த மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை காரணமாக, பல்வேறு முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. சென்னை மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி தமிழனா?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

O. Panneerselvam, Edappadi Palanisamy honored at Anna Memorial!

பேரறிஞர் அண்ணாவின் 53- வது நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினர். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தலின் போது தி.மு.க. பொய் வாக்குறுதி அளித்து தமிழ்நாட்டு மக்களை நம்பிக்கை மோசடி செய்து விட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைக்க தி.மு.க. மக்களைத் திசை திருப்புகிறது. 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூக நீதியை நிலை நிறுத்தியது அ.தி.மு.க. ஆட்சி தான். 

O. Panneerselvam, Edappadi Palanisamy honored at Anna Memorial!

தேர்தல் வந்தவுடன் சமூக நீதி, தமிழின பிரச்னையை தி.மு.க. கையிலெடுக்கிறது. தமிழன் தமிழன் என்று சொன்னால் ராகுல் காந்தி தமிழன் ஆகிவிடுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி எம்.பி. தான் தமிழன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

மெரினாவில் மக்கள்.. (படங்கள்) 

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பொது முடக்கம் அலம்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பரவலின் தாக்கம் குறையத் துவங்கியது. தொற்று பரவலின் தாக்கம் குறைதலுக்கேற்ப முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்படியிருக்க, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாம் அலை தீவிரமாக பரவத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பின் தொற்று பரவலின் தாக்கம் குறையத் துவங்கியதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தற்போது கடற்கரைகளுக்குப் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.