Skip to main content

மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு மீட்கப்பட்ட 198 தமிழர்களின் மாவட்ட வாரியான விபரம்...!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020


 

maldives to thookudi ships coronavirus lockdown 198 peoples

 

'ஆபரேசன் சமுத்திர சேது திட்டம்' மூலம் மாலத்தீவிலிருந்து 198 இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் இன்று (23/06/2020) தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 195 நபர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 198 தமிழர்களின் மாவட்ட வாரியாக விபரங்களை வெளியிடப்பட்டுள்ளன.

 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த மக்கள் தத்தமது தாயகம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய கப்பற்படையின் ஆபரேசன் சமுத்திரா சேது திட்டத்தின் மூலம் மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றி தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 3,107 இந்தியர்கள் ஐ.என்.எஸ்.ஜாஷ்வா, ஐ.என்.எஸ் மஹர், ஐ.என்.எஸ் ஷர்துல் மற்றும் ஐ.என்.எஸ் அய்ராவத் உள்ளிட்ட இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர். 

 

maldives to thookudi ships coronavirus lockdown 198 peoples

 

இதனின் ஒரு பகுதியாக  தாயகம் திரும்ப இயலாமல் மாலத்தீவில் தவித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 195 நபர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 198 தமிழர்களை மீட்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் விளைவாக 188 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் ஆண்குழந்தைகள் 3 உள்ளிட்ட 198 நபர்களை அழைத்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தூத்துக்குடிக்குப் புறப்பட்டது ஐ.என்.எஸ் அய்ராவத் கப்பல்.

 

இன்று (23/06/2020) காலை 06.40 மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் வந்த ஐ.என்.எஸ் அய்ராவத் 198 பயணிகளையும் பத்திரமாக தரையிறக்கியது. மாவட்டத்தின் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்டோர் ஒத்துழைப்போடு தரையிறங்கிய அனைவரும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 

maldives to thookudi ships coronavirus lockdown 198 peoples

 

மருத்துவப் பரிசோதனை முடித்த அனைவரின் முகவரிகளும் சரிப்பார்க்கப்பட்டு வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பயணம் செய்தவர்களில் புதுச்சேரி 3 தவிர்த்து, சிவகங்கை 7, தென்காசி 4, தேனி 6, திருவள்ளூர் 1, திருவண்ணாமலை 1, அரியலூர் 4, சென்னை 1, கடலூர் 5, தர்மபுரி 1, திண்டுக்கல் 3, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 3, கன்னியாகுமரி 64, கரூர் 1, கிருஷ்ணகிரி 1, மதுரை 5, நாகை 6, பெரம்பலூர் 15, புதுக்கோட்டை 11, ராமநாதபுரம் 10, சேலம் 4, திருவாரூர் 4, திருச்சி 10, திருநெல்வேலி 5, தூத்துக்குடி 5, வேலூர் 1, விழுப்புரம் 4, விருதுநகர் 3 உள்ளிட்ட மாவட்டங்களில் 195 நபர்களும், நபர்களும் என மாவட்ட வாரியாகப் பட்டியல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.