Skip to main content

கமல் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

makkal needhi maiam leader and actor kamal haasan flying squad officers searched for vehicle

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதேபோல், வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதால், தமிழக தேர்தல் சூடுபிடித்துள்ளது.

 

makkal needhi maiam leader and actor kamal haasan flying squad officers searched for vehicle

 

மற்றொரு புறம் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், திருச்சியில் நடைபெற உள்ள கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது கேரவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கமல்ஹாசனின் வாகனத்தைச் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின்னர் அவரின் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.  


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கமல்ஹாசனின் நடிப்பை அதிகளவில் பார்க்க முடியும்” - இந்தியன் 2 குறித்து ஷங்கர்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Shankar on Indian 2 to praise kamalhaasan

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியிட்டு விழா, கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இந்தியன் 2 படத்தின் படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. முதல் பாகமாக இந்தியன் படம் தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தியன் 2 தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தில், 40 நாட்கள் சிறப்பு மேக்கப் (பிராஸ்தெட்டிக் மேக்கப்) போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில், சுமார் 70 நாட்கள் சிறப்பு மேக்கப் போட்டு கமல் நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் இறுதி நேரம் வரை கமல்ஹாசன் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தார். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. ஆனால், இந்த படத்தில், கமல்ஹாசனின் நடிப்பை முதல் பாகத்தில் இருந்ததை விட அதிகளவில் பார்க்க முடியும்” என்று கூறினார். 

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Bakrit festival Greetings leaders

பக்ரீத் பண்டிகை இன்று(17.06.2024) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச் செயலளார் டி.டி.வி. தினகரன் எனப் பலரும் பக்ரீத் பண்டிகை திருநாளுக்கான வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

மேலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களின் சிறப்புத் தொழுகை நடத்தி வழிபட்டனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக; உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Bakrit festival Greetings leaders

அதே சமயம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.