Skip to main content

காதலனை கடத்தி தாக்கிய இளம்பெண்! இவ்வளவு கோபம் வர காரணம் என்ன?

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

 

சென்னையைச் சேர்ந்தவர் கசிம் முகமது. இவருடைய மகன் 21 வயதுடைய நவீத் அகமது பி.காம் இறுதி ஆண்டு முடித்துள்ளார். நவீத் அகமதுவை ஒரு கும்பல் திடீரென கடத்திக்கொண்டு போய், அவரது விலை உயர்ந்த செல்போனை பிடிக்கொண்டு தாக்கிவிட்டு சென்றுள்ளது. மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த நவீத் அகமது, அங்கிருந்த ஒருவரின் உதவியோடு செல்போனில் தனது தந்தைக்கு தான் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். 

 

selfie



இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை ஒரு இளம்பெண் கடத்தியது தெரிய வந்தது. 
 

நவீத் அகமதுவுக்கு செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் 20 வயது மகளுடன் நட்பு ஏற்பட்டு இருவரும் நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். அந்த தொழில் அதிபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். 

 

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அந்த பெண் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அந்த இளம்பெண், நவீத் அகமதுவை அடிக்கடி சந்தித்துள்ளார். அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசும்போது, நெருக்கமாக ‘செல்பி’ எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
 

இந்த நிலையில் சம்பவத்தன்று நவீத் அகமதுவும், இளம்பெண்ணும் ஒரு பூங்காவில் சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்த ‘செல்பி’ படத்தை அழிக்கும்படி அப்பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக சென்றுவிட்டனர்.
 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தன்னுடைய நண்பர்களை தொடர்பு கொண்டு நடந்தவைகளை கூறினார். மேலும் அவர் செல்போனில் இருக்கும் நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

இதையடுத்துதான் நவீத் அகமது இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட நவீத் அகமதுவை தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்ததும், அவரிடம் இருந்த செல்வோனை எடுத்துச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சியில் இருசக்கர வாகனம் எண் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இரண்டு நபர்களை போலுசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு வாலிபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தியல் மேற்கண்ட விவரங்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த அந்த இளம்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்