Skip to main content

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்... வியாபாரிகளின் கண்களிலோ கண்ணீர்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

kutralam

 

தென்மேற்குப் பருவ மழை காலாவதியாகி தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. வாராத கொடையாய் வந்த தென்மேற்குப் பருவக்காற்று நெல்லை தென்காசி மாவட்டப் பகுதியை ஒட்டிய தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் புறமுள்ள கேரளாவில் பருவமழையாய்க் கொட்டிய போது, அந்த நேரத் தமிழகக் கோடையான மே தொடங்கி ஆகஸ்ட் வரையில் தென்காசி மாவட்டத்தின் குற்றாலப் பகுதிகளின் சீசனாய் பெய்ததால் மெயினருவி ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ள நீர் அருவியாய்க் கொட்டியது.

ரம்மியமான அந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தை நம்பியுள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள், தனியார் ரிசார்ட்கள், மெயின் வீதி கடைகளின் வியாபாரம், வருகிற சுற்றுலாப் பயணிகளால் முற்றுகைக்கு உட்படும். வியாபாரம் களைகட்டும் அதனை நம்பியுள்ள மேற்கண்ட அனைத்து வியாபார மக்களும் பயனடைவர். காலம் காலமாகக் குற்றால அருவிகளின் வழியாய் வியாபாரத்தை நம்பியுள்ள இந்தப் பாமர மக்களின் பிழைப்பை, வாழ்வாதாரத்தை இந்த வருட கரோனா எனும் மாயாவி பதம் பார்த்துவிட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின்பு தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. அதன் விளைவாய், கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்தன. விளைவு குற்றால அருவிகள் அனைத்திலும் வெள்ளம் அருவியாய்க் கொட்டுகிறது.

 

kutralam falls


கரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் கரோனா தொற்று தடுப்பின் பொருட்டு அரசு லாக்டவுண் அறிவித்து எட்டாவது மாதமாகத் தொடர்வதால் குற்றாலத்தின் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுத் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான தடை காரணமாக, லாட்ஜ்கள், அரசுப் பேருந்துகளின் போக்குவரத்து கார் பார்க்கிங், மஸாஜ் தொழில், தங்கும் விடுதிகள் சாலையோரக் கடைகள் மூடப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்தின்மையால் சீசன் வியாபாரம் படுத்துவிட்டது.
 

cnc

 

இந்த வருட எங்களின் வியாபார வருமானம் வாழ்வாதாரம் அனைத்தையும் கரோனா காவு கொண்டுவிட்டது. 4 மாத சீசன் வியாபாரம் 30 கோடிக்கும் மேல் இழப்பு. வெளியே சொல்ல முடியாத கஷ்டம் கண்ணீரைத் தவிர எங்களிடம் வேறில்லை என வேதனையைக் கொட்டுகின்றனர் பெயர் சொல்ல விரும்பாத வியாபார மக்கள்.

குற்றாலத்தில் அருவியைக் காணலாம். ஆனால் குளிக்க அனுமதியில்லை. வரும் சீசனின் ஐயப்ப பக்தர்களின் வருகையுமிருக்காது என்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்