Skip to main content

''எனக்கு புக்கும் நோட்டும் கொடுத்தீங்கனா எங்க அம்மாவ காப்பாத்தி விட்டுருவேன்''-கண்ணீரை வரவைத்த சிறுமியின் பேச்சு!   

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

கோவை அடுத்த மேட்டுப்பாளையத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் வீடு உடைமைகள் இழந்தவர்கள் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்தினர்.

 

mettupalayam accident -the little girl's tears!


அப்போது கணவனை இழந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்து வருவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பக்கத்துக்கு வீட்டில்தான் தற்பொழுது தங்கியுள்ளோம். அவர்தான் (கணவர்) ஆதரவாக இருந்தார் அவரும் போய்ட்டார். இப்பொழுது வீட்டுவாசல் மட்டுமில்லாமல் குழந்தைகளின் படிப்பு வரை எல்லாமே போயிருச்சு. மாத்து துணிகூட இல்லை. பாத்திரப் பண்டம், ஆதார் கார்டு என எல்லாமே போயிருச்சு எங்கள் உயிர் மட்டும்தான் இருக்கு என கண்ணீர் மல்க கூறினார்.

அப்போது அந்த தாயின் மகளான, சிறுமி கண்ணீர் நிறைந்த கண்களுடன் ''நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கப்பாதான் மேல போயிட்டாரு எனக்கு புக்கும் நோட்டும் துணிமணியும் கொடுத்தீங்கனா எங்க அம்மாவ காப்பாத்தி விட்டிருவேன்'' என கண்ணிருடன் தேம்பி தேம்பி அழுத்தபடி கூறியது மனவேதனையை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்