Skip to main content

 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' தமிழ் பதிப்பில் ஏற்பட்ட பெரிய தவறு!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

'KGF. Big mistake in the Tamil version of Chapter 2 '!

 

கடந்த 2018- ஆம் ஆண்டு, யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப். சேப்டர் 1' திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 'கே.ஜி.எஃப். சேப்டர் 2 'வெளியீடு அடுத்தடுத்து தள்ளிப்போன நிலையில், தமிழ் புத்தாண்டு நாளான இன்று (14/04/2022) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

 

'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படம், பாகுபலி போன்று அழகிய தமிழில் வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்துக் காட்சிகளும் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், ஃபாக்ஸ் ஆபிஸில் ஆர்ஆர்ஆர்-யைப் பின்னுக்கு தள்ளி 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த நிலையில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படம் தமிழ் மொழியில் வெளியான நிலையில், அதன் தமிழ் பதிப்பில் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

ஸ்கிரீனிங்கில் 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' என்பதற்கு பதிலாக 'கே.ஜி.எஃப். சப்டர் 2' என்று இருந்ததால், திரையரங்குகளில் இருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த புகைப்படம் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'காக்கா முட்டை' இயக்குநர் வீட்டில் திருட்டு; கடிதத்துடன் வந்த தேசிய விருது

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'kakka muttai' director's house burglarized; National award with letter

காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட நிலையில், இயக்குநருக்குத் திருடர்கள் கடிதம் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தேசிய விருது பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர்ப் பகுதியில் மணிகண்டன் வசித்து வருகிறார். அடுத்த திரைப்படப் பணிகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல மணிகண்டன் தன் படத்திற்காக வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'kakka muttai' director's house burglarized; National award with letter

இந்த நிலையில், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று இரண்டு வரிகள் எழுதப்பட்ட கடிதத்தையும் தேசிய விருதுக்கான பதக்கங்களையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டு கேட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். உசிலம்பட்டி காவல்துறையினர் அந்த கடிதத்தை கைப்பற்றிய தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.