Skip to main content

வேலூர் மக்களவை உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்பு!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று பதவியேற்றார். இவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 

kathir anand took oath in legislative assembly


பணப்பட்டுவாடா காரணத்தால் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யபட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தேர்தல் நடந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஏசி சண்முகத்தை தோற்கடித்தார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று நடந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.