Skip to main content

'காரைக்குடிக்கு புதுவரவு'-அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

 'Karaikudi Law College' - Minister Raghupathi's announcement!

 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று காரைக்குடியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதியதாகச் சட்டக்கல்லூரி அமைக்கப்படும். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகள் தலா 80 பேருடன் 2022-23 கல்வியாண்டில் தொடங்கப்படும். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும் தலா ஒரு தற்சார்பு  நீதிமன்றம் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம், திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும். உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்களுக்கான கூடுதல் கட்டடம் 4.25 கோடி ரூபாயில் கட்டப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்