திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் வைப்பதற்கு உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் வைப்பதற்காக நேற்று சோழவரத்தில் இருந்து இரண்டு கலைஞர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிலைகளும் ஃபைபரால் செய்யப்பட்டிருந்தது.
ஒரு சிலை மிக யதார்த்தமாக நாற்காலியில் அமர்ந்து கலைஞர் கையில் பேனாவுடன் சிந்தனை செய்வது போலும் மற்றொரு சிலை கலைஞர் நிற்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் நேற்று மெரினா அருகே வைக்கப்பட்டிருந்தது. கலைஞர் நினைவிடம் வந்த பொதுமக்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைகளை ஆர்வமுடன் பார்த்ததுடன், அருகே நின்று செல்பியும் எடுத்துச்சென்றனர்.
இந்நிலையில், கலைஞர் நினைவிடத்தில் சிலைகளை வைப்பதற்கு உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்டதால், அதனை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
Published on 23/08/2018 | Edited on 23/08/2018