Skip to main content

சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்! (படங்கள்)

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

இன்று (21.07.2021) சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத் தலைவர் வெங்கடேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதில் சென்னையில் செயல்படும் பல்வேறு தனியார் கம்பெனிகளில் தற்காலிகமாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் தேவைகள் என்ன என்பதைத் தெரிவித்தனர்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையர், “இந்த ஆணையத்தின் சார்பாக முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அதில் முக்கியமாக, பணியிலிருந்து நீக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மறுபடியும் எந்தெந்த துறைகளில் சேர்க்கலாம் என ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தீர்களோ, அந்த துறைகளிலே சேர்க்க வேண்டும்; இந்த முகாமில் பலரும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்கள். அவைகளைத் தீர்த்து தருவதாக ஆணையரும் உறுதியளித்துள்ளார். அதேபோல் சில இடங்களில் பணியாளர்களின் பணத்தில் இருந்து அவர்களுக்கென துடைப்பம் வாங்க கூறியுள்ளனர். சிலர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளனர். அதனையும் தீர விசாரித்து உண்மை நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களுடைய கோரிக்கைகளைக் கூறியுள்ளோம். அதற்கு ஆணையரும் தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியுள்ளார்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்