Skip to main content

பாதுகாப்பு இல்லாத பெண்கள் பயணம்! போக்ஸோ சட்டத்தில் தொடர் கைது! 

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

பெண்கள் ஆண்களுக்கு நிகர் என்று எல்லா வேலைகளில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வந்து கொண்டு இருக்கும் இதே நேரத்தில்தான் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சம்பவங்களும், சபல ஆசாமிகளின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்மையில் தெலுங்கனாவில் நிகழ்ந்த சம்பவத்தை கூட நாம் மறந்திருக்க மாட்டோம். பல நேரங்களில் பெண்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் பல விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் திருச்சியில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசாமிகள் மீது புகார் கொடுத்து கைதான சம்பவம் அடுத்தடுத்து நடந்துள்ளது.

 

women


சென்னையில் இருந்து இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பி 4 பெட்டியில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுமதி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பயணம் செய்தார். இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கோச்சில் அவருக்கு அருகில் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் (வயது 40) என்பவரும் பயணம் செய்தார். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையையொட்டி ஊரில் உள்ள மனைவியை பார்க்க வந்தார்.

அப்போது இரவில் முத்துகுமார் சுமதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை உடனே கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் சுமதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.

அதிகாலை 4.30 மணிக்கு ரெயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு வந்ததும் சுமதி திருச்சி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. கைதான முத்துகுமார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 31-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் சிவகங்கையை சேர்ந்த ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு 18 வயது மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். ருக்மணிக்கு மதுரை குலமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (40) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது.

திருச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மகன், மகளை பார்க்க செல்லும்போது கண்ணனின் லாரியில் ருக்மணி அடிக்கடி செல்வார். இதில் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமானது.

 

women

 

இந்தநிலையில் கண்ணனின் லாரியில் ருக்மணியும் அவரது மகளும் திருச்சிக்கு புறப்பட்டனர். வழியில் திருச்சி வந்ததும் ருக்மணி மகனை பார்க்க செல்வதற்காக லாரியில் இருந்து இறங்கி விட்டார். தனது மகளை மணப்பாறையில் உள்ள கல்லூரி அருகே இறக்கி விடும்படி அவரை நம்பி அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் லாரி வையம்பட்டி அருகே சென்றபோது கண்ணன் திடீரென மாணவியிடம் அத்துமீறியுள்ளான். ஓடும் லாரியில் மாணவி கண்ணனிடம் இருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளார்.

வழியில் வையம்பட்டியில் லாரியை நிறுத்திய கண்ணன் மாணவியிடம் அத்துமீறியுள்ளான். இதனால் பயந்து போன மாணவி அவரிடமிருந்து தப்பி அருகில் இருந்த கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்ததை கூறி அழுதார்.

அப்போது அங்கு வந்த கண்ணனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து மணப்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து மாணவியின் தாய் ருக்மணி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்ணன் மீது போக்சோ சட்டம், தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கண்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சியில் நடந்த இந்த 2 சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவில் இருந்து போய் விடுகிறேன்'' - தமிழிசைக்குத் திருச்சி சூர்யா சவால்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'I will leave BJP if I prove Tamilness' - Trichy Surya interview

'பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன்' எனப் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா பேசுகையில், ''இருக்கும் மாண்பை முன்னாள் மாநில தலைவர் (தமிழிசை) காப்பாற்ற வேண்டும். பொது இடத்திற்கு போகும் போது தவறான விஷயங்களைப் பேச வேண்டாமே. சில விஷயங்களைச் சொல்வதற்கும் இடம் இருக்கிறது. இன்றைக்கு தனிப்பட்ட முறையில் தமிழிசை அக்கா எனக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழிசை அக்காவுக்கும் பயங்கர போர் நடக்கும். அந்தச் சூழ்நிலையிலும் நான் திமுகவில் இருக்கும் பொழுது கூட என்னுடைய மகன் பிறந்தநாளுக்கு வந்துட்டு போனார்கள். அவர்கள் என் மீது மிகவும் பிரியம் கொண்டவர். ஆனால் கட்சி ரீதியாக பார்க்கும் போது அவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும், அவரை தலைவராக ஏற்று நான் பாஜகவிற்கு வரவில்லை.

யார் தலைவரோ அவருடன் உடன்பாடு, பிரியம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். திமுகவினர் சிலர் ஆட்டுக்கு பாஜக தலைவரின் புகைப்படத்தை மாட்டிவிட்டு அதை நடு ரோட்டில் வெட்டுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தமிழிசை எங்காவது அதற்கு கண்டனம் தெரிவித்தார்களா? அவங்களை பரட்டை எனச் சொன்னது கோபம் வருகிறது. ஆனால் மாநில தலைவரின் புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி அதே திமுக காரர்கள் நடுரோட்டில் வெட்டுவதற்கு தமிழிசை கண்டனம் தெரிவிச்சாரா? அதை எல்லாம் பேசாதவர்கள் இதை ஏன் பேச வேண்டும். உங்களுக்கு கருத்து இருந்தால் முன்னாள் மாநில தலைவர் என்ற கட்டுப்பாடுடன் கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன். ஒரு குற்றப்பின்னணியில் வருவோரை கட்சியில் சேர்த்தார்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அது நடந்தது முன்னாள் மாநில தலைவர்கள் இருந்த சூழ்நிலையில்தான்'' என்றார்.

Next Story

பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு பூகொடுத்து வரவேற்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Teachers welcomed the students with flowers

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட இருக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். திருச்சி, கடலூர், கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து வரும் மாணவர்களை வரவேற்பதோடு, புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர், இனிப்பு, புத்தகப்பை, எழுதுபொருள்  கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பூக்கள் கொடுத்து மாணவர்களைஆசிரியர்கள் வரவேற்றனர்.