Skip to main content

ஆயுதங்களுடன் இன்ஸ்டா ரீல் - இளைஞர் கைது

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Insta reel with weapons- youth arrested

பல ஆண்டுகளாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

அண்மையில் ஓடும் ரயிலுக்கு பக்கவாட்டில் நடந்து செல்வது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் ரயில் மோதி தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கு முன்பே காவல் நிலையங்கள் முன்பு ஆயுதங்களை கையில் வைத்தபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தென்காசியில் அச்சன்புதூர் பகுதியில் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோக்கள் வெளியிட்ட இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சன்புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற 20 வயதான இளைஞர் ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சதீஷ் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிலநாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த மன்னாரு என்ற இளைஞர் கையில் பட்டாகத்தி உடன் நின்றுகொண்டு சேதமடைந்த வீட்டின் சுவற்றின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, அதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் திருச்சி பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்