Skip to main content

பணியில் அலட்சியம்... கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் மூவர் சஸ்பெண்ட்! 

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

kovai

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 

இந்நிலையில், கோவையில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் ராமகிருஷ்ணா கேடியா  சமர்ப்பித்த அறிவறிக்கையை 2 மணிநேரம் ஆகியும் சரிபார்க்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் மீது புகார் எழுந்த நிலையில், பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் குமரவேல், பிரசாத் ஆகிய மூன்று பேரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்