Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 63 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆ.அன்பழகன். இவருக்கு 63 வயதாகிறது. இதே ஊரைச் சேர்ந்த, இவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது சிறுமி உள்ளார்.  இந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதுடன்,  கை கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையிலும்,  வாய்ப் பேச இயலாத நிலையிலும்  உள்ளார்.

 

incident in cuddalore

 

கடந்த 03.07.2018 அன்று இந்த 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனது தம்பிகள் இருவருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் அந்தச் சிறுவர்களிடம் 'உங்க அக்காவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். நீங்கள் வெளியே போய் விளையாடுங்கள்' என்று வெளியே அனுப்பிவிட்டு, அதன்பிறகு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி சத்தம் எழுப்பவே அவரது துப்பட்டாவை வாயில் வைத்து அழுத்தியுள்ளார்.  ஆனாலும் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவர்கள் கத்தவே அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து அன்பழகனை அடித்து விரட்டினர்.

இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் கலாசெல்வி பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த  63 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.