Skip to main content

''பச்சையா பூசி மொழுகுறாங்க; ஐசியூல அந்த பேப்பரை எடுத்துக் காட்டுறாங்க'' - மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

ICU is showing that paper'' - the child's mother met the reporters again

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான ஊசி போடப்பட்டதில் குழந்தையின் கை அழுகியதாகவும், அதன் காரணமாக குழந்தையின் கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேற்று தகவல் வெளியாகியது. இதனால் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து குழந்தையின் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ICU is showing that paper'' - the child's mother met the reporters again

 

அதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அசிஜா பேசுகையில், ''மூன்று நாட்களாக பச்ச குழந்தை துடித்தது. நைட் டூட்டி டாக்டர் வராங்க.. அந்த டாக்டர் கிட்ட குழந்தையோட கை ரெட்டிஷ் ஆகுது சார் என்றேன். இல்லம்மா, லைன் எடுத்ததால்தான் அவனுக்கு வலிக்கிறது என்றார். நான் ஒரு ஆயின்மென்ட் எழுதி தரேன் அதை போடுங்க சரியாய் போய்விடும் என்றார். அன்று நைட்டில் இருந்து மறுநாள் காலை வரைக்கும் அந்த ஆயின்மென்ட்டை போடுகிறேன். அதை போட்டு எந்த ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்லை. எந்த ஒரு மாற்றமும் இல்லை.

 

இரண்டு நாளாக கையை நகர்த்த மாட்டேங்கிறான் பாருங்க என்று சொன்னேன். யாருமே பார்க்க மாட்டேன் என்றார்கள். நேற்று மூன்றாவது நாள் எல்லா டாக்டரும் ரவுண்ட்ஸ் வருவார்கள். அந்த டைமில் நான் மருத்துவரிடம் சொன்னேன். இரண்டு கையில்தான் எதைக் கொடுத்தாலும் வாங்குவான். கையை நகர்த்த முடியவில்லை அவனால் என்று சொன்னதற்கு நாங்கள் ஒரு ஸ்கேன் எடுத்துக் கொண்டு வரோம் என காலையில கூட்டிட்டு போனாங்க. அதன் பிறகு எங்களிடம் சொல்லவே இல்லை. ஒரு அரை மணி நேரம் கழித்து உங்க பையனோட கை அழுகி போயிருச்சு கையை ரிமூவ் பண்ணி ஆகணும். வேற ஆப்ஷன் இல்லை என்று சொன்னார்கள்.

 

வலது கை இல்லனா பாதி வாழ்க்கையே இல்லை. தமிழக அரசு மூன்று நாள்ல பதில் சொல்லும், மூன்று டீம் அனுப்பி இருக்கோம் என்று சொல்கிறார்கள். மூன்று நாட்களில் என்ன பதில் சொல்வீர்கள். எனக்கு இன்னைக்கே பதில் கிடைக்கனும். இருக்கிறவங்களாக இருந்தால் மூன்று மணி நேரத்தில் கண்டுபிடித்து இருப்பீங்க. இல்லாதவங்களா இருக்கறதுனால மூணு நாள் எடுத்துக்கறீங்க. தமிழ்நாட்டுல நூறு சதவீதத்தில் 80 சதவீதம் பேர் அடிப்படை பொருளாதார வசதியே இல்லாதவர்கள் தான். அவர்கள் யாரை தேடி போவார்கள். பணம், காசு கேட்கும் ஹாஸ்பிடல் தேடியா போவாங்க'' எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அசிஜா, ''அங்கு செவிலியர்கள் இருந்தார்கள் என்றால் ஏன் அலட்சியமாக கையில் போட்டு இருந்த வென்ப்ளானரை நீக்கவில்லை. இது பச்சையா பூசி மொழுகுகிறாங்க. என்ன நடந்தது தெரியுமா.. மினிஸ்டர் சார் வந்தாங்க, அவங்க பின்னாடி நிறைய பேர் வந்திருந்தாங்க. என்னை பேச விடவில்லை. ஒருவேளை நான் மீடியாவில் பேசுவதால் என்னவோ என்னை பேச விடவில்லை. என் கணவரிடம் தான் என்ன பண்றீங்க, என்ன படிச்சு இருக்கீங்க, எங்க இருக்கீங்க எல்லாமே கேட்டாங்க. நாங்க ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சமையல் பண்ணி பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கோம். பாரிஸில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கோம் என்றோம்.

 

தொடர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். நடந்த ஆபரேஷன் பத்தி சொன்னோம். ஒரு வருஷம் பையன் நல்லா இருந்தான். போன வாரம் திடீரென மோஷன் போகும்போது டியூப் வெளியே வந்து விட்டது. அதன் பிறகு சர்ஜரிக்கு இங்கே அட்மிட் பண்ணனோம். ஞாயிற்றுக்கிழமை நைட் சர்ஜரி நடந்தது. அப்புறம் மூன்று நாள் நன்றாக இருந்தான். அதன் பிறகு அவனது ஐந்து விரல்களும் ரெட்டிஷ் ஆகியது. அவர்கள் சொல்லுவது போல் இருந்தால் நல்லா இருக்க குழந்தைக்கு ஏன் ஆயின்மெண்ட் போடச் சொல்லணும். இந்த ஆயின்மென்ட் தான் போடச் சொன்னாங்க.

 

nn

 

ஆபரேஷன் பண்ணும் போதும் டெஸ்ட் எடுக்கும் போதும் ஜிஹெச் உடைய பார்மாலிட்டி என்ன? ஒரு இன்ஜெக்ஷன் போடப் போகிறோம். அது ரத்த குழாயை அடைக்கலாம்; மூளையை பாதிக்கலாம் என லெட்டரில் கையெழுத்து வாங்குவது உண்டுதானே. எல்லா தாயுமே பெற்றோருமே தன் பிள்ளையை காப்பாற்றுவதற்காக அந்த பேப்பரில் நான் யோசித்து விட்டு கைது போடுகிறேன் என்று சொல்வார்களா அல்லது பேப்பரை நீட்டி உடனே கையெழுத்து போடுவாங்களா. காப்பாற்றுவதற்கு தான் கையெழுத்து போடுவாங்க.

 

இன்னைக்கு ஐசியூல அந்த பேப்பரை வைத்துக் காட்டுகிறார்கள். நீங்க தானே ஃபாதர் நீங்க தானே கையெழுத்து போட்டு கொடுத்தீங்க. இதில் உள்ளத எல்லாம் தெரிந்து கொண்டுதானே கையெழுத்து போட்டு கொடுத்திருப்பீங்க எனக் கேட்கிறார்கள். அந்த சூழ்நிலையில் நாங்கள் கையெழுத்துதான் போட்டுக் கொடுப்போம். அதில் என்ன இருந்தது என்ற ஆராய்ச்சியா பண்ணுவோம். நாங்க என்ன டாக்டருக்கா படிச்சிருக்கோம். டாக்டருக்கு படிச்சிருக்க உங்ககிட்ட தீர்வு கண்டுபிடிக்க தான் வந்தோம். பையனுக்கு தலையில நீர் இருக்கிறது என்றுதான் கொண்டு வந்தேன். ஆனால் இப்பொழுது கையவே எடுத்துட்டாங்க'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்