Skip to main content

“வைகை அணையிலிருந்து ஆத்தூர் தொகுதிக்குக் குடிதண்ணீர் கொண்டுவரப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 I. Periyasamy said Drinking water will be brought from Vaigai Dam to Attur Constituency

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட என்.பஞ்சம்பட்டி, அம்பாத்துரை, செட்டியபட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி என்.பஞ்சம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் முருகேசன். ஆத்தூர் நடராஜன், ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக மக்கள் நலனுக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் ஒப்பற்ற தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வளம் வந்த மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளைத் தீர்க்க புகார்பெட்டி வைத்து அதன் மூலம் தமிழக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி தலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தற்போது அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்து வரும் திங்கள் கிழமை முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். காரணம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு மத, ஜாதி இன வேறுபாடின்றி செயல்படக்கூடிய ஒரேதலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். சொல்வதை மட்டுமின்றி சொல்லாததையும் நிறைவேற்றி மக்கள் மனதில் 100 சதவீதம் நம்பிக்கை நட்சத்திரமாக நம் முதல்வர் உள்ளார்.

ஆத்தூர் தொகுதி மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களின் குடிதண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வைகை அணையிலிருந்து ரூ.565கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்பட உள்ளது. பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை, கோரிக்கை மனுக்களை நிறைவேற்றும் போது அவர்கள் தரும் ஆதரவுதான் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு மென்மேலும் நலத்திட்டங்களை செயல்படுத்த ஊக்கம் தரும். நீங்கள்  சிரித்தால்தான் நாங்கள் சிரிக்க முடியும். நீங்கள் வருத்தப்பட்டால் நாங்களும் வருத்தத்துடன் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

நான் பஞ்சம்பட்டிக்கு எப்போது வந்தாலும் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன். காரணம் எனக்கு என்றும் ஆதரவு தரும் கிராமங்களில் பஞ்சம்பட்டி ஊராட்சியும் ஒன்றும் இப்போது இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இன்று இரவே அதற்கான பணிகள் தொடங்கும் இது உறுதி. மேலும் மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக கழிப்பறை வசதியும் செய்துகொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்தப் பணியும் விரைவில் தொடங்கும். இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் அனுப்பும் மனுக்கள் முறையாக தாலுகா அலுவலகங்களுக்கு வருவதில்லை. இதை மாவட்ட ஆட்சியர் கண்கானிக்க வேண்டும்.

காரணம் 7தொகுதிக்கும் கண்கானிக்க கூடியவர் நம்முடைய மாவட்ட ஆட்சியர். இனிமேல் இ-சேவை மையங்கள் மூலம் அனுப்பப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இம்மாதிரி முகாம்கள் மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் லட்சகணக்கான மக்கள் பயன்பெருகிறார்கள். இந்தத் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் இடங்களுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு பதிவு செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்