Skip to main content

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரி  கௌரவ விரிவுரையாளர்கள்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Honorary Lecturers of Government Arts College engaged in struggle

 

திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சம்பளம், 2019 ஆண்டிற்கான கரோனா கால சம்பளம், 14 மாதத்திற்கான அரியர் சம்பளம் ஆகிய சம்பளங்கள் வழங்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 6 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

 

அதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (17.12.2021) காலை 11 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அனைத்துத்துறை கௌரவ விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும், இதுபோன்று திருவெண்ணைநல்லூர், தென்னாங்கூர், அரக்கோணம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் கோரிக்கைகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையும் செவிசாய்க்குமா? என்ற எதிர்பார்ப்பில் கௌரவ விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்