Skip to main content

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
r

 

எச்.ஐ.வி.  ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.   மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.   

 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பின்னர் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதையடுத்து  அந்த கர்ப்பிணி பெண் மதுரை ராஜாஜி அரசு அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு 9 மருத்துவர்கள்  அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர்.

 

இந்நிலையில் இன்று அப்பெண் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.   பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.   பிறந்த பெண் குழந்தையின் எடை  குறைவாக இருப்பதால் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.  குழந்தைக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி மற்றும் எச்.ஐ.வி. தொற்று தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.   45 நாட்களுக்கு பின்னர் இக்குழந்தைக்கு எச்.ஐ.வி. சோதனை செய்யப்படவிருக்கிறது.   

 

சார்ந்த செய்திகள்