நாடு முழுவதும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம், அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும் எனவும், அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அதை அடைவதற்குரிய மொழி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து கருத்து கூறுகையில்,
தமிழ்நாடு மட்டுமல்ல வேறு எந்த நாடாக இருந்தாலும் ஒரு பொதுமொழி இருந்தால் அந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. துரதிஷ்ட வசமாக நம்முடைய நாட்டில் பொதுவான மொழியை கொண்டுவர முடியாத நிலை எனவே இங்கு எந்த மொழியையும் திணிக்கமுடியாது. முக்கியமாக இந்தியை இங்கு திணிக்க முடியாது, தமிழகத்தில் மட்டுமல்ல தென் மாநிலங்களிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடநாட்டிலும் இந்தியை இங்கு திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.