Skip to main content

ஆளுநர் வருகை..! திமுகவின் கறுப்புக்கொடியும்.. புதிய தமிழகத்தின் வரவேற்பும்!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார். அதனால் மாநில சுயாட்சியில் ஆளுநர் தலையிடுவதாக கூறி எதிர்கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்தநிலையில், புதுகோட்டை மாவட்டத்திற்கு 20ந் தேதி வருவதாக தகவல் வெளியானதையடுத்து திமுக மாவட்ட, ஒன்றிய, நகர திமுகவினர் திடீர் ஆலோசனைக் கூட்டம் கூட்டி ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக அவசர கூட்டம், மாரியய்யா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பொருப்பாளர்கள் தெற்கு ரகுபதி, வடக்கு செல்லப்பாண்டியன் மா.செ பெரியண்ணன் அரசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாநில சுயாட்சிக்கு எதிராக ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஆளுநருக்கு கட்சிக் கொடியை அசைத்து வரவேற்பு கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்