Skip to main content

புஷ்கரம் வேளாண் கல்லூரிக்கு விருது வழங்கிய ஆளுநர்!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

Governor presents award to Pushkaram Agricultural College

 

புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி கடந்த 2017ஆம் ஆண்டு கல்வித் தந்தை லயன் டாக்டர் ரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியைத் தொழிலாக செய்யாமல் அரணாக செய்துவருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் அக்கறையுடன் சேவை மனப்பான்மையுடன் செய்துவருகிறார்கள்.

 

இந்த வேளாண் கல்லூரியில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு பல்வேறு சாதனைகளையும், சேவைகளையும் செய்துவருகிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வளரும் கல்லூரியாக இருந்துவருகிறது. அந்த அளவுக்குக் கல்லூரியின் சேர்மனான டாக்டர் ரத்தினம் மற்றும் இயக்குநர் துரை ஆகியோர் வளர்ந்துவருகிறார்கள். 

 

இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி சார்பில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக துறை சார்ந்த கல்லூரிகளைக் கொண்டு ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில்தான் புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி சிறந்த வளரும் கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு, கற்றல் விருதுகள் வழங்க முடிவு செய்தனர். 

Governor presents award to Pushkaram Agricultural College

 

அதன் அடிப்படையில்தான் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்த விருது வழங்கும் விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இணை இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் செயலாளர் ராஜாராம் ஆகியோரிடம் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த வளரும் கல்லூரிக்கான கற்றல் விருதை வழங்கினார். 

 

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சபாநாயகர் அப்பாவு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு உயரதிகாரிகள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்