Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு  தண்ணீர் கொடுக்கும் திமுக எம்எல்ஏ!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
j


   திண்டுக்கல்  மாவட்டத்திலேயே கொடைக்கானலில் உள்ள மேல்மலை கீழ்மலை பகுதிகளில்தான் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது.   இதன் மூலம்  அப்பகுதியில் உள்ள பூம்பாறை,  மன்னவனூர்,   போளூர் வில்பட்டி, 
கிளவரை உள்பட பல மழை கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்தும்,  ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் போடப்பட்ட பூண்டு, உருளை, பீன்ஸ், கேரட்  போன்ற விவசாய பொருடகள் அழிந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது அப்படியிருந்தும்கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுங்கட்சியினரும் மாவட்ட நிர்வாகமோ நேரில் சென்று ஆறுதல் கூறவோ, நிவாரண பொருட்கள் வழங்கவோ  முன்வரவில்லை.

 

d

 

இதனால் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுக்கும் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர் அதை  கண்டு அதிர்ச்சி அடைந்த  தொகுதி எம்எல்ஏவான ஐ.பி. செந்தில்குமார் கொடைக்கானலில் உள்ள மேல்மலை. கீழ்மலை பகுதிகளுக்கு உடனடியாக சென்று கடந்த ஒருவாரமாக அப்பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து ஆறுதல் கூறியும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியும் அங்கங்கே ரோட்டு ஓரங்களிலும்‌ கிராமங்களிலும்  போக்குவரத்து இடையூறாக விழுந்து கிடக்கும்  மரங்களையும் மின்கம்பங்களையும் அப் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் வைத்து  சீர்படுத்தும் பணிகளையும் இறங்கி வருகிறார்.  

 

vv1

 

அதோடு அப்பகுதி மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாததால் வத்தலகுண்டு, கொடைக்கானல், பெருமாள்மலை  உள்பட சில பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாட்டர் டேங்க் லாரிகளை வாடகைக்கு பிடித்து மேல்மலை மற்றும் கீழ் மலை  பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினசரி குடிநீரும் தொகுதி எம்எல்ஏவான ஐபி செந்தில்குமார் வழங்கி வருகிறார். 


அதோடு போக்குவரத்து சரியில்லாத பகுதிகளில் கூட ஜீப்பு மற்றும் டூவீலரில் சென்று வீடுகளை இழந்து நிற்கும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியும், அதுபோல் மலை பகுதிகளில் உள்ள காடுகளுக்கு சென்றும் புயலால் பாதிக்கப்பட்ட மலை விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அதுவும் மலை கிராமக்களுக்கு முன் உரிமை அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினைய்யிடம்  வலியுறுத்தி இருக்கிறார் .   அதோடு தொடர்ந்து மலை கிராம  பகுதிகளில் முகாம் போட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை நடைப்பயண வழியில் புகுந்த காட்டெருமை; தெறித்து ஓடிய பாஜகவினர்!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

A wildebeest that entered the Annamalai trek rout

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்'' எனும் யாத்திரையைத் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்களுடன் நடந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கான திட்டமிடல் ஏற்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால் அதிகப்படியான பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

 

கையில் பாஜக கொடியுடன் காத்திருந்த நிலையில், திடீரென காட்டெருமை ஒன்று அந்த வழியில் புகுந்தது. அங்கிருந்த சிலர் பட்டாசு வெடித்ததால் காட்டெருமை துள்ளி ஓடியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சிதறி ஓடினர். மறுபுறம் அண்ணாமலை நடைப்பயணத்திற்காக வைக்கப்பட்டிருந்த மைக் செட்டில், 'காட்டெருமை வருவதால் பொதுமக்கள் நகர்ந்து காட்டெருமைக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்' என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். சாலையில் சாவகாசமாக காட்டெருமை நடந்து செல்லும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

சுற்றுலா வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; சிக்கிய ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகி

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

kotaikkanal incident; Case against hostel owner

 

கொடைக்கானலில் சுற்றுலா வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேஷன் தலைவராக இருந்து வருபவர் அப்துல் கனி ராஜா. இவர் திண்டுக்கல் கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். கொடைக்கானலில் முக்கிய பகுதியான நாயுடுபுரம் பகுதியில் ரோஷன், ஷாலியா என்ற இரண்டு தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் மகள், மனைவி என குடும்பத்துடன் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அப்பொழுது வழக்கறிஞர் மனைவி தனக்கு உடல் சோர்வாக இருப்பதால் தான் விடுதி அறையிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் வழக்கறிஞரும் அவரது மகளும் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க சென்றனர்.

 

kotaikkanal incident; Case against hostel owner

 

இந்த நிலையில் வழக்கறிஞரின் மனைவி தனது அறையில் வைஃபை இணைப்பு எடுக்கவில்லை என போன் மூலம் விடுதி உரிமையாளர் அப்துல் கனி ராஜாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அறைக்கு சென்ற அப்துல் கனி ராஜா அப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டதால் அப்துல் கனி ராஜா அந்த அறையை விட்டு வெளியே ஓடியதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து அந்தப் பெண் நடந்ததை தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக அறைக்கு வந்த வழக்கறிஞரும் அவரது மகளும் அறையை காலி செய்து கொண்டு கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு சென்று சுற்றுலா வந்த இடத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி புகார் அளித்தனர். உடனடியாக தங்கும் விடுதி உரிமையாளர் அப்துல் கனி ராஜாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.

 

kotaikkanal incident; Case against hostel owner

 

அதைத் தொடர்ந்து அப்துல் கனி ராஜா மீது 354 (A), 376, 511 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல் நிலையம் முன்பு கூட்டம் கூடியது. அப்துல் கனி ராஜாவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்ட நிலையில், அவர் மயக்கம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அவரை தூக்கிச் சென்ற போலீசார் கொடைக்கானல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

கொடைக்கானலில் சுற்றுலா வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.