Skip to main content

தஞ்சை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு!!!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

 Full curfew tomorrow in Tanjore district

 

சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  அதேபோல் திருவாரூர், அரியலூர், கடலூர், நாகை மாவட்டங்களில் நாளை ஒரு நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவாதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்