Published on 10/12/2024 | Edited on 10/12/2024
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஐந்து வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள் தெருப் பகுதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நில அதிர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என புத்தாநத்தம் பகுதி மக்கள் அச்சத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்.