Skip to main content

தெற்கு வங்க கடல் பகுதிக்கு நாளையும் மறுநாளும் மீனவர்கள் செல்ல வேண்டாம்-சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
WEATHER

 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பிருப்பதால் வட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், கிழக்கு மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கும் எனவே தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும்.  நாளை 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறிய அவர் இன்றும் நாளையும் அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவித்துள்ளார்.

 

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழத்தின் ஒருசில பகுதிகளிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்