Skip to main content

மீனவ பெண் எரிப்பு; மகளிர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

fisher woman case Demonstration by women's organization

 

இராமேசுவரத்தில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வடமாநிலத்தவரை கடுமையாக தண்டிக்கோரி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள  முருகன்குடியில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

தமிழ் தேசிய பேரியக்க மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாநிலத்தவரின் கொடுஞ்செயலை கண்டித்து, வட மாநிலத்தவர் வருகையை தடுக்க உள் அனுமதி சீட்டு (Inner line permit) முறையை உடனடியாக தமிழக அரசு அமலுக்கு கொண்டு வரவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள ஒரு கோடி வடநாட்டவரை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முருகன்குடி பேருந்து நிலையத்தில் மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி தலைமை தாங்கினார். மகளிர் ஆயத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொறுப்பாளர் சிலம்புச்செல்வி, பேரியக்க பொறுப்பாளர் தி.ஞானபிரகாசம், மகளிர் ஆயம் பொறுப்பாளர் மு.தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

 

 

சார்ந்த செய்திகள்