Skip to main content

குரங்கணி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Published on 15/03/2018 | Edited on 15/03/2018


தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

கடந்த 12 ஆம் தேதி தேனி மாவட்ட குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அங்கு மலையேற்றத்திற்கு சென்ற 40 பேர் விபத்துக்குள்ளாகினர். இந்த கோர விபத்தில் தீயில் கருகி இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை- கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குரங்கணி மலைக்கு மலையேற்றத்திற்கு அழைத்து சென்ற வழிகாட்டி ராஜேஸ் போலிசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேனியிலிருந்து காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ராஜ்குமார், குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வகண்ணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சென்னை பாலவாக்கத்தில் இயங்கிவந்த ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு வந்த தனிப்படை போலீசார் ட்ரெக்கிங் கிளப் குறித்தும் அதன் உரிமையாளர் பீட்டர் குறித்தும் தகவல்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து பீட்டரை தற்போது காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்