Skip to main content

பசுமை வழி சாலைக்கு எதிரான கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்  - மார்க்சிஸ்ட்  முழுஆதரவு

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
pasumai

 

மார்க்சிஸ்ட் தமிழ்மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிவிப்பு:
’’சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமைவழிச்சாலை என்ற பெயரில புதிதாக ஒருசாலையை அமைக்க மத்திய, மாநிலஅரசுகள் உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படஇருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய்மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படஇருக்கிறது.

 

இச்சாலைக்காக விவசாயிகளுக்குசொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படஇருக்கிறது. விவசாயிகளுக்குசொந்தமான ஆயிரக்கணக்கானஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளிகிணறுகள், ஏரிகள், குளங்கள் எனநீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்படஇருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வனநிலங்கள் அழிக்கப்படுவதால்சுற்றுச்சூழல் கடுமையாகபாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள்உட்பட இடம் பெயர வேண்டிய நிலைஏற்படும். ஆயிரக்கணக்கானோர்தங்களின் குடியிருப்புகளை இழந்துவெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தான் பசுமை வழிச்சாலைதிட்டத்தை எதிர்த்து விவசாயிகளும்,பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆனால், அரசு போராடும் மக்கள் மீதுகாவல்துறையை ஏவி மிரட்டுவது,அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைதுசெய்து சிறையிலடைப்பது போன்றஅடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது. இத்தகையசட்டவிரோத அணுகுமுறைகளைஉடனடியாக நிறுத்த வேண்டுமெனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்துகிறது.

 

தமிழக அரசின் அடக்குமுறையைக்கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களைபாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தைகைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறுஅமைப்புகளின் சார்பில் 2018 ஜூன் 26ந்தேதி காஞ்சிபுரம், திருவண்ணாமலை,தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகியஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடிஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த கருப்புக்கொடி ஏற்றும்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.மக்களின் நலன் காக்க நடைபெறும்இப்போராட்டத்தைவெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளைமாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

’’

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.