
விழுப்புரம் அருகே துக்க நிகழ்வுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் துரைக்கண்ணு, பச்சையம்மாள், கல்லூரி மாணவி கோபிகா ஆகியோர் செஞ்சியில் துக்க நிகழ்வுக்காக இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து செஞ்ச சென்றுவிட்டு பின்னர் சென்னை திரும்பியுள்ளனர். அப்பொழுது செஞ்சி வல்லம் தொண்டி ஆற்றுப்பாலம் அருகே மூவரும் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்து செஞ்சி போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். செஞ்சி திருவண்ணாமலை சாலையில் இந்த விபத்து சம்பவத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.