Skip to main content

காப்பீட்டு தொகை வழங்காததைக் கண்டித்து  விவசாயிகள் போராட்டம்!

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
 Farmers are protesting against the non-payment of insurance!

சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். ஆரணி - கொசஸ்தலை ஆற்றில் போதிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து காப்பீட்டு தவணை தொகையை செலுத்தி வந்தனர், பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்திய பின்னரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை வேளாண்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை நேரடியாகவும், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திலும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையும், 100 அடிக்கு ஒரு போர்வெல் அமைத்து மழைக் காலங்களில் தண்ணீர் ஆனது வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மெதூர் கிராமத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பழவேற்காடு - பொன்னேரி இடையே செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த வேளாண் துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்