Skip to main content

20-ரூபாய் டோக்கன்,ஓட்டுக்கு பத்தாயிரம் பொய் வாக்குறுதிதான் மோதலுக்கு காரணம்!! -ஜெயக்குமார்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 

ஆர்.கே நகரில் நடந்த மோதல் சம்பவத்திற்கு தினகரனுக்கு எதிராக மக்கள் கொண்ட எதிர்ப்பின் வெளிப்பாடே காரணம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar

 

 

 

காஞ்சிபுரம் வாணியஞ்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்த  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 

 

ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் என 20 ரூபாய் டோக்கனை வழங்கி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிபெற்ற தினகரனிடம் மக்கள் அந்த பணத்தை எதிர்பார்கின்றனர். அப்படிபட்ட நிலையில்அவர் தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டமன்றத்திற்கும் வருவதில்லை.

 

இன்று தொகுதி மக்களை பார்க்கச்சென்ற பொழுது பொதுமக்களாய் ஒன்று சேர்ந்து இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை தொகுதிப்பக்கம் வருவதாக கூறி ஏமாற்றினார். அதைத்தான் மக்கள் கேட்கிறார்கள், தொகுதிக்கு வாரம் ஒருமுறை வருவேன் என்று சொன்னீர்களே?, குறைக்களை தீர்ப்பேன் என்று சொன்னீர்களே?, பணம் தருகிறேன் என்று சொன்னீர்களே? என கேட்கிறார்கள். இப்படி மக்கள் கோவம்தான் மோதலாக உருவாகியுள்ளது இதற்கும் அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறினார்.

சார்ந்த செய்திகள்