Skip to main content

'போலி பொதுக்குழு கலைக்கப்படும்' - ஓபிஎஸ் தரப்பு தகவல்

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

 'Fake General Assembly to be Disbanded' - OPS Information

 

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாதம் இறுதிக்குள் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தவும், அது முடிந்த பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் திட்டமிடுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கான தேதியை இறுதி செய்வது குறித்தும் திருச்சியை விட மிக பிரம்மாண்டமாக அடுத்த மாநாட்டை நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

 

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் யாரும் போலி பொதுக்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உண்மையான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். நேர்மையான தேர்தல் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்