Skip to main content

ஈரோடு இடைத்தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

 Erode by-election; The campaign is over

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது ஓய்ந்துள்ளது ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்.

 

இன்று ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்பொழுது தேர்தல் விதிப்படி பிரச்சார நேரம் முடிந்தது. வெளியூர் மற்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்பதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்