Skip to main content

அரசு உத்தரவை மீறும் ஊழியர்கள்; சமயபுரம் கோயிலில் பக்தர்கள் அவதி

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Employees who violate government orders; Devotees at Samayapuram temple

 

திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது விலக்கிக் கொள்ளப்பட்டது. மொட்டை போடுவதற்கு பக்தர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என இந்து அறநிலையத் துறை சார்பில் அறிவுறுத்தி இருந்தனர். 

 

ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 100 முதல் 200 ரூபாய் வரை கட்டாயம் கட்டணம் வசூலித்துக்கொண்டு தான் மொட்டை அடிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி, அதிக கட்டணம் வசூலித்த 7 பேரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்தார்.

 

இதனை கண்டித்து மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்திற்கு முன்பு அமர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கோவில் இணை ஆணையரான கல்யாணி, மொட்டை அடிப்பதற்கு கட்டாயமாக பணம் வாங்கக்கூடாது என கூறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் மொட்டை அடிப்பவர்கள் பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நாங்கள் வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமயபுரம் கோவிலுக்கு மொட்டை அடிக்க வந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை மண்டபத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்