தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து திடீர் திடீரென அதிகரிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்தந்த வானிலை நேரங்களை கணக்கிட்டு நீர்வரத்தை பொறுத்து குற்றால அருவியில் குளிப்பதற்கு தடையும் அனுமதியும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பில் குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி குற்றால அருவியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அருவியில் குளிக்க வந்த இடத்தில் மது குடித்துவிட்டு சிலர் மது போதையில் அங்கிருந்த காவலர்களிடம் வம்பிழுத்த நிலையில் போதை இளைஞர்களை காவல்துறையினர் குளித்துக் கொண்டிருந்த மேனியோடு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் ''குளிக்க வந்தா குளிக்க தானே செய்யணும் எதற்கு இவ்வளவு போதை உனக்கு. நான் போலீஸ்னு சொல்கிறேன் சட்டை புடிச்சு இழுக்குறீங்க. என்ன பண்ணிட்டிருக்க'' என போலீசார் கேட்க, 'நான் மாடு மேய்க்கிறேன்' என போதை இளைஞர் பதில் சொல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.