Skip to main content

''இன்று மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் நானே அந்த கடிதத்தை வெளியிடுவேன்''- ஸ்டாலின் பேட்டி

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பட்ஜெட் தாக்கல் மீதான உரையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு விவரங்களை மொத்தமாக 3.15 மணி நேரம் வாசித்தார். இந்த பட்ஜெட் மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.20 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 

 

dmk stalin interview


இந்த நிதிநிலை அறிக்கை ஏன் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற ஒருவராக இருக்கின்ற ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்து நிதிநிலை அறிக்கையை படித்துள்ளார். ஜெ.வின் மறைவுக்கு பின் அவரது சமாதிக்கு சென்று இந்த ஆட்சியை அகற்ற எண்ணியது, இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டது இப்படி நடந்துகொண்ட அவரே இப்பொழுது இப்படி மாறியிருக்கிறார். அவர் மாறிவிட்டாரே தவிர மற்றவர்கள் யாரும் மாறவில்லை.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பத்தாவது பட்ஜெட், இது யாருக்கு பத்தாத பட்ஜெட்டாக, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இருக்கிறது. இது கடைசி நிதிநிலை அறிக்கை, அதுவும் இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை. நிதிப்பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வரை 1 லட்சம் கோடியில் இருந்த கடன் தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதிநிலையை பொறுத்தவரை தொலைநோக்கு திட்டமும் இல்லை, வளர்ச்சி திட்டங்களும் இல்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இலாகாவிற்கு மட்டும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன? 

பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலம் வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். அண்மையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு இங்கிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி ஒரு கடிதத்தை கொடுத்ததாக செய்தி வந்தது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லப்படவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன் இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லியாக வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்