Skip to main content

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மு.க. ஸ்டாலின்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

dmk chief mkstalin to take swearing oath ceremoney in raj bhavan chennai

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்கிறார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார். 

 

பின்னர், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்கிறது. செந்தில் பாலாஜி, ஐ. பெரியசாமி, துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கீதா ஜீவன், பொன்முடி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன் உள்ளிட்ட 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்கின்றனர். 

 

கரோனா பரவல் காரணமாக, எளிமையான முறையில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

 

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (07/05/2021) மாலை 04.00 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று (07/05/2021) பதவியேற்றப் பின் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்