Skip to main content

தமிழகத்தில் திமுக கூட்டணி முழு வெற்றி!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
DMK alliance complete victory in Tamil Nadu

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரவு 10 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றியையும் பதிவு செய்துவிட்டனர். 

DMK alliance complete victory in Tamil Nadu

அதன்படி திருவள்ளூரில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்தில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து வரலாறு காணாத வெற்றியை சசிகாந்த் பெற்றுள்ளார். வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். அதே போனறு மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றுள்ளார் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெறுள்ளார். இவர் 5 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றறுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார். கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றுளார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 664 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 4 லட்சத்து 27 ஆயிரத்து 677 வாக்குகள் கார்த்தி சிதம்பரம் பெற்றுள்ளார். 

DMK alliance complete victory in Tamil Nadu

நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லட்சுமிபதி வெற்றி சான்றிதழை அவரிடம் வழங்கினார். மேலும் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றுள்ளார். நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1 லட்சத்து 85 ஆயிரத்து 896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

DMK alliance complete victory in Tamil Nadu

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றுள்ளார். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தொகுதியில விசிக தலைவர் திருமாவளவன் வெற்றிச் பெற்றுள்ளார். தென்காசி தொகுதியில் 1.96 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜக வேட்பாளர் நந்தினியைத் தோற்கடித்தார். விளவங்கோடு எம்.எல்.ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததால், இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்