Skip to main content

'அ.தி.மு.க.வில் சேரச் சொல்லி மிரட்டுகிறார் அமைச்சர் செங்கோட்டையன்' - கம்யூனிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 DMK - ADMK - minister sengottaiyan - Communist MP


பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளிக் கல்வித்துறை. இந்த நிலையில் அவர் தனது தொகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என நேரடியாக மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 


8 ஆம் தேதி காலை திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. திருப்பூர் சுப்பராயன் கோபிசெட்டிபாளையம் வந்திருந்தார். தொடர்ந்து அவர் குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள நாதிபாளையம் என்ற இடத்தில் 200 மீட்டர் நீளத்திற்குத் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். 

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.-வும் அமைச்சருமான செங்கோட்டையன் அமைச்சருக்குறிய தகுதியில் அவர் நடந்து கொள்வதில்லை. இந்தத் தொகுதியில்தான் ஏராளமான கிராவல் மண் ஆளும் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. அதேபோல் இங்கு உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை உயர்த்துவோம் எனக் கூறுகிறார்கள். அணையின் உயரத்தை உயர்த்துவதை விட அணையில் உள்ள சேற்றை வெளியே எடுத்தால் போதும் அணையின் ஆழம் அதிகமாகும். இதையெல்லாம் செங்கோட்டையன் எதையும் செய்யாமல், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணையச் சொல்லி இப்போது மிரட்ட ஆரம்பித்துள்ளார். 
 

 


தி.மு.க.வை சேர்ந்த சில தொழிலதிபர்களை நேரடியாக அ.தி.மு.க.வுக்கு வரவேண்டுமென செங்கோட்டையன் மிரட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் மக்களுக்குப் பொதுவானவராக இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இப்படிக் கட்சியில் இணையச் சொல்லி மிரட்டுவது எல்லாம் நாகரீகமான செயல் அல்ல. அதே போல் இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியினர்  தலையிட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நடைபெறாமல் தடைப்பட்டால், நான் நேரடியாக வந்து போராட்டம் செய்வேன்." என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வுக்கு ஆள் பிடிக்கிறார் அதுவும் தி.மு.க.வை சேர்ந்தவர்களை மிரட்டி கூப்பிடுகிறார் எனக் கம்யூனிஸ்ட் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் குற்றச்சாட்டு வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்