Skip to main content

இயக்குனர் முக்தா சீனிவாசன் மறைவிற்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 30/05/2018 | Edited on 31/05/2018

இயக்குனர் முக்தா சீனிவாசன் மறைவிற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன். தஞ்சை தரணியில் பிறந்து, நெஞ்சை அள்ளும் விதத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அவரது மறைவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

துவக்க காலத்தில், மாடர்ன் தியேட்டரில் பணியாற்றிய அவர், முதன்முதலில் “முதலாளி” திரைப்படத்தை இயக்கியதோடு, முதல் படத்திலேயே குடியரசு தலைவரின் விருதை பெற்றவர். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களை வைத்து இயக்கியவர். 350க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிய அவர், தன் வீட்டையே ஒரு நூலகமாக மாற்றி, அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதித்தவர். முதலில் பொதுவுடைமைக் கட்சியிலும், பிற்காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

 

Director Mukhtar Srinivasan Stalin mourning


 

திரையுலகம், எழுத்துத்துறை, அரசியல் என்று அனைத்துத் துறையிலும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய திரு. முக்தா சீனிவாசன் அவர்களுடைய மறைவு திரையுலகத்திற்கும், குறிப்பாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்