Skip to main content

ஐயப்பசாமிக்கு  தங்க அங்கி ஆபரண பெட்டியை சுமந்த சென்ற  தமிழக ஐய்யப்ப சாமி

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
i

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராமையா ஐயப்ப பக்தர்.  இவர் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சபரிமலையில் தங்கி அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் சேவை செய்து வருகின்றார். 


மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களிலும் மாத பூஜையில் சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களிலும் தவறாமல் சபரிமலை சென்று விடுவார். அங்கு ஐயப்பனை காண வரும் அய்யப்ப பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றார்.


 முக்கியமாக மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். அச்சமயத்தில் இவர் எமர்ஜென்சி பிரிவு எனப்படும் பிரிவில் பணியாற்றி வருவார்.    அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனால்,   இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு உதவுவது இப்பிரிவின் பணியாகும்.  இவரது இப்பணிக்காக மண்டல பூஜையின் போது ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சுமந்துவரும் வாய்ப்பினை அகில பாரத ஐயப்ப சேவா அமைப்பு இந்த வாய்ப்பினை இவருக்கு வழங்கியுள்ளது. 

 

இது பற்றி ராமையா கூறியதாவது ....நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வருகின்ற சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சுமக்கும் அரிய பாக்கியத்தை எனக்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வழங்கியுள்ளது. இந்த முறை என் வாழ்நாளில் பாக்கியமான எண்ணுகிறேன். என் ஆயுள் முழுவதும் இச் சேவையை செய்து வருவேன். மேலும் என்னுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் ஐய்யப்பனுக்கு அனுபவிக்க கூடிய அங்கியை சுமந்து வந்தனர்  என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்