Skip to main content

பள்ளி வேன் கவிழ்ந்து  20 மாணவ, மாணவிகள்  படுகாயம்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியில் புனித சூசை நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தாமரைப்பாடி முள்ளிப்பாடி, சீலப்பாடி., என்.ஜி.ஒ.காலனி  பாடியோர் உள்பட சில பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.  

 

v


  இப்படி பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ மாணவிகள் நடந்து செல்வதும்,  வேன் மூலமாக வந்து செல்வதுன் வழக்கம்.   அது போல் தான் இன்று வழக்கம்போல்  என்.ஜி.ஒ.காலனி,  சீலப்பாடி  பகுதிகளில் இருந்து பள்ளிக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள்  30 பேர் வழக்கம் போல் வேனில் சென்று கொண்டு இருந்தனர்.  

 

v


அப்போது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற வேன் பாடியூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழிவிடும்போது இந்த வேன் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.  அதைக் கண்டு வேனில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஐயோ... அம்மா...என்று கதற ஆரம்பித்தனர்.  

 

 அப்பகுதியை சேர்ந்த மக்கள்  பதறி அடித்து ஓடி வந்து  வேனில் சிக்கி உள்ள மாணவ, மாணவிகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 18 மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர்.  அந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
 

சார்ந்த செய்திகள்